தனியொருவராக இதுவரை 110 லிற்றருக்கு மேல் இரத்த தானம் செய்த நபர்
9 ஆனி 2024 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 4257
அமெரிக்காவின் லாங் ஐலேண்டைச் சேர்ந்த ஒருவர் இதுவரை சுமார் 29 கேலன் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 68 வயதாகும் Henry Bickoff என்பவரே, கடந்த 49 ஆண்டுகளில் சுமார் 29 கேலன் இரத்தம்( தோராயமாக 110 லிற்றர்) தானம் செய்துள்ளார். கடந்த 1975 முதல் இரத்த தானம் செய்து வரும் இவரால், 693 பேர்கள் பயனடைந்துள்ளனர்.
இரத்த தானம் என்பது தாம் உறுதியளித்த ஒன்று எனவும், அதற்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் Henry Bickoff குறிப்பிட்டுள்ளார்.
தமது கல்லூரி காலகட்டத்தில் முதல் முறையாக இரத்த தானம் செய்ததாக குறிப்பிடும் அவர், பெரும்பாலானோர் இரத்த தாம் செய்கின்றனர். இது ஒருவகை உலகை காக்க, ஏதேனும் நல்லது அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற நிலை என அவர் விளக்கமளித்துள்ளார்.
முதல் தடவை இரத்த தானம் செய்த போது மிகவும் மயக்கமாக உணர்ந்ததாக கூறும் அவர், ஆனால் அது ஒன்றும் தம்மை பயமுருத்தவில்லை என்கிறார். தொடக்கத்தில் ஒவ்வொரு 56 நாட்களுக்கும் ஒருமுறை இரத்த தானம் செய்து வந்ததாக கூறும் அவர், தற்போது வயதின் காரணமாக குறைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Henry Bickoff-ன் மனைவி அவ்வப்போது இரத்த தானம் செய்து வந்துள்ளார். ஆனால் அரிய வகை இரத்த நோய் காரணமாக அவரது மகள் இரத்த தானம் செய்வதில்லை. மகனுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றும் Henry Bickoff தெரிவித்துள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan