யாழில் வெளிநாட்டவருக்கு சொந்தமான வீட்டில் சிக்கிய ஆபத்தான ஆயுதங்கள்

8 ஆனி 2024 சனி 10:03 | பார்வைகள் : 5153
ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
சுன்னாகம் ஈவினைப் பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டிலே வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், குறித்த விடயத்தில் வெளிநாட்டு பிரஜைக்கும் தொடர்புள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025