Paristamil Navigation Paristamil advert login

பரிசில் தீ விபத்து.. மூவர் காயம்!

பரிசில் தீ விபத்து.. மூவர் காயம்!

7 ஆனி 2024 வெள்ளி 16:50 | பார்வைகள் : 11753


இன்று ஜூன் 7, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.20 மணிக்கு பரிசில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியது.

பரிசில் 1 ஆம் வட்டாரத்தையும், நான்காம் வட்டாரத்தையும் இணைக்கும் rue de Rivoli வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே தீ பரவியிருந்தது. அங்குள்ள ஐந்து அடுக்கு கட்டிடத்தின் முதலாவது தளத்தில் தீ பரவியிருந்தது.



உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். மொத்தமாக 90 தீயணைப்பு படையினர் களத்தில் நின்று போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். சிலமணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டு, மீண்டும் பிற்பகல் வீதி திறக்கப்பட்டது.

தீ பரவியமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்