Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா..?

 நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா..?

7 ஆனி 2024 வெள்ளி 14:10 | பார்வைகள் : 5568


கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் ஆரோக்கிய உணவுகளில் பரவலாக கிடைக்கும் ஒன்றாக இருந்து வருகிறது நுங்கு. தோலை உரித்து சதைப்பற்றுள்ள நுங்கை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் நீர் நுங்கின் சுவையை கூட்டுகிறது. பலவேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் நுங்குகள் வெப்பமான காலநிலையில் நம் உடலை குளிரூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளன. வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களின் சரியான கலவையை நுங்குகள் கொண்டிருக்கின்றன. கோடை காலத்தில் நுங்குகளை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்…

கோடை காலத்தில் நம் உடலில் எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிப்பது முக்கியம். குறிப்பாக வெயிலின் தாக்கத்தினால் அதிகரிக்கும் வியர்வையால் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களை நம் உடல் இழக்க நேரிடும் போது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது அவசியமாகிறது. மேற்கண்டஅத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளை வழங்குவதன் மூலம் நுங்கு எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் டிஹைட்ரேஷன் மற்றும் சோர்வை தடுக்கின்றன.

நம் உடலுக்கு தேவைப்படும் இயற்கையான ஆற்றலை நுங்கு அளிக்கிறது. இதற்கு நுங்கில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கன்டென்ட் காரணமாக இருக்கிறது. நுங்கில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் நம் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

கோடை கால டயட்டில் நுங்குகளை சேர்க்க அவசியமான மற்றொரு முக்கிய காரணம் அதிலிருக்கும் டயட்ரி ஃபைபர். கோடைகாலத்தில் டிஹைட்ரேட் ஆவது பொதுவானது. இதனால் மலசிக்கல் மற்றும் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் நுங்குகளில் இருக்கும் டயட்டரி ஃபைபர் குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

கோடை காலத்தில் நுங்குகளை எடுத்து கொள்வது அதிகரித்து காணப்படும் உடல் வெப்பநிலையை கணிசமாக குறைக்க உதவுகிறது மற்றும் கடும் வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஹீட் ஸ்ட்ரோக் அல்லது வெப்பம் தொடர்பான பிற நோய்களுக்கு ஆளாக கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு நுங்குகள் நன்மை பயக்கும்.

நுங்குகளில் இருக்கும் அதிக நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி தேவையற்ற உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க உதவி இயற்கையான முறையில் உடலில் இருக்கும் கொழுப்பை இழக்க உதவுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்