Paristamil Navigation Paristamil advert login

மொஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ள பிரெஞ்சு நபர்.. உறுதிசெய்த ஜனாதிபதி மக்ரோன்..!

மொஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ள பிரெஞ்சு நபர்.. உறுதிசெய்த ஜனாதிபதி மக்ரோன்..!

7 ஆனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 11566


இரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பிரெஞ்சு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இரஷ்யா அறிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதி செய்துள்ளார்.

"ஆம், ரஷ்யாவில் எங்கள் நாட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் (Kofi Annan) நிறுவிய சுவிஸ் அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரியும் மற்றும் இராஜதந்திரம் செய்யும் எங்கள் தோழர்களில் ஒருவர்" என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வழங்கிய உரையின் போது இதனை அவர் தெரிவித்தார்.

இரஷ்யா தரப்பில், குறித்த நபர் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்