Ivry-sur-Seine : கத்திக்குத்து தாக்குதல்...

6 ஆனி 2024 வியாழன் 17:00 | பார்வைகள் : 10553
Ivry-sur-Seine (Val-de-Marne) நகரில் இவ்வார திங்கட்கிழமை காலை கத்தி குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.
rue Verollot வீதியில் மகிழுந்தில் காத்திருந்த ஒருவரே காலை 9 மணி அளவில் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். அவரது கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில், படுகாயமடைந்து பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார்.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டுமணிநேரத்துக்கு முன்பு அதே பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025