தரையிறக்கம் : 20 நிமிடங்கள் தாமதமாக வருகை தந்த மக்ரோன்.. அதிர்ச்சியில் உறைந்த அரசர்!
6 ஆனி 2024 வியாழன் 14:03 | பார்வைகள் : 9764
Normandie தரையிறக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை Vers-sur-Mer (Calvados) பகுதியில் இடம்பெற்றது. பிரான்ஸ்-பிரித்தானிய இராணுவத்தினருக்காக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மக்ரோன் தாமதமாக வருகை தந்தார்.
10 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது. பிரித்தானிய அரசர் மற்றும் அவரது துணைவியாருக்கு அருகே மக்ரோன் தம்பதியினருக்கு கதிரை ஒதுக்கப்பட்டிருந்தது.
இறுதியாக 10.20 மணிக்கு ஜனாதிபதி மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் ஆகிய இருவரும் வருகை தந்ததனர்.
இதனால், அரசர் மற்றும் அவரது மனைவி 20 நிமிடங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது. பிரித்தானியாவின் ஆங்கில ஊடகங்கள் இதனை குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan