■ சஹாராவில் இருந்து மணற்புயல்.. எச்சரிக்கை..!
6 ஆனி 2024 வியாழன் 13:39 | பார்வைகள் : 17205
சஹாரா பாலைவனத்தில் இருந்து மணற்புயல் பிரான்சில் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7, வெள்ளிக்கிழமை இந்த எச்சரிக்கை ஒட்டுமொத்த பிரான்சுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு பிராந்தியங்களில் வசிப்பவர்கள் (Nouvelle-Aquitaine, Auvergne-Rhône-Alpes, Occitanie, Provence-Alpes-Côte d'Azur) இந்த எச்சரிக்கை தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்படி வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
கண்களுக்குத் தெரியாத மிகவும் மெல்லிய மணற்துகள்கள் காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், கண் எரிவு, சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan