Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தமிழில் சஞ்சய் தத்..

மீண்டும் தமிழில் சஞ்சய் தத்..

6 ஆனி 2024 வியாழன் 11:58 | பார்வைகள் : 5378


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய்யின் அப்பாவாகவும் அதே நேரத்தில் வில்லனாகவும் நடித்திருந்த நிலையில் அவருடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் வேறு சில தமிழ் படங்களில் நடிக்க சஞ்சய் தத் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய்தத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் அதிரடி ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பை ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைவார் என்றும் அவர் இந்த படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. தற்போது சஞ்சய் தத் இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு விடப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களை வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்