தரையிறக்கம் : ’Saving Private Ryan’ திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் வருகை!

6 ஆனி 2024 வியாழன் 07:40 | பார்வைகள் : 9411
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு கொண்டாட்டம் இன்று இரண்டாவது நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் (Steven Spielberg) வருகை தந்துள்ளார்.
Normandie தரையிறக்கம் என்றதும் தவறாமல் க்ளாஸிக் திரைப்படமான Saving Private Ryan (ஆங்கிலம்) ஞாபகத்துக்கு வரும். தரையிறக்கத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை கண் முன்னே காண்பித்த அத்திரைப்படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் இன்று ஜூன் 6, காலை பிரான்சை வந்தடைந்தார்.
அத்தோடு அத்திரைப்படத்தில் ‘கேப்டன் மில்லர்; கதாப்பாத்திரத்தில் நடித்த Tom Hanks உடன் வருகை தந்துள்ளார்.
Caen – Carpiquet விமான நிலையத்தில் அவர்கள் இன்று காலை வந்தடைந்தனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025