வெடிகுண்டு தயாரித்தவர் கைது.. மேலதிக விபரங்கள்!
6 ஆனி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 14118
Roissy-en-France (Val-d'Oise) நகரில் வைத்து வெடிகுண்டு தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக முதல் கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சில மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை முற்பகல் அங்குள்ள விடுதி (hôtel) அறை ஒன்றில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. அதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய ஒருவர் அங்கு எரிவு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன்போதே வெடிகுண்டு வெடித்து முகத்தில் எரிவு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உக்ரேனைச் சேர்ந்தவர் எனவும், மிக நன்றாக இரஷ்ய மொழி பேசக்கூடியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Le parquet national antiterroriste) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan