காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க ஜொந்தாமினரின் கட்டிடத்துக்குள் நுழைந்த நபர்..!

5 ஆனி 2024 புதன் 13:22 | பார்வைகள் : 8287
போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, ஜொந்தாம் வீரர்களின் கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளார்.
இச்சம்பவம் Maisons-Alfort (Val-de-Marne) நகரில் திங்கட்கிழமை (ஜூன் 3 ஆம் திகதி) இடம்பெற்றுள்ளது. Avenue Busteau பகுதியில் மாலை 6 மணி அளவில் காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான ஒருவரைக் கைது செய்ய முற்பட்டனர். அவர் போதைப்பொருள் கடத்தல் விற்பனை செய்பவர் எனவும், அவரைக் கைது செய்ய முற்பட்டபோது தப்பி ஓடி, மதில் ஒன்றினால் ஏறி உள்ளே குதித்துள்ளார்.
ஆனால் அது rue du Professor-Cadiot வீதியில் உள்ள ஜொந்தாம் அதிகாரிகளின் கட்டிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளே வைத்து அவர் ஜொந்தாமினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 370 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025