இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கு பிரான்ஸ் வாழ்த்து.

5 ஆனி 2024 புதன் 09:14 | பார்வைகள் : 7858
நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்நிலையில், மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 8ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 3வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கும் ப.ஜ.கா கூட்டணிக்கு பிரான்ஸ் அரசும், ஐரோப்பிய தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.