இலங்கையில் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி பொய் கூறிய நபருக்கு நேர்ந்த கதி
3 ஆனி 2024 திங்கள் 16:21 | பார்வைகள் : 15758
பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி, பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர் கினிகத்தேன பொலிஸ் நிலைய அதிகாரிகள் மது விருந்து நடத்துவதாக தெரிவித்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.பாரூக் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று திடீர் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அது தொடர்பான தகவல்கள் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகத்திற்கிடமான அழைப்பை விடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10,000 ரூபாவை வழங்குமாறு சந்தேகநபருக்கு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan