Aubervilliers : நடு வீதியில் வைத்து கத்திக்குத்து தாக்குதல்..!!

3 ஆனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 13810
வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது ஆயுததாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவர் உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இத்தாக்குதல் Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Alfred-Jarry வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது ஆயுததாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அடி வயிற்றிலும் முதுகிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அதையடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்கு அழைதுச் செல்லப்பட்டார்.
நாற்பது வயதுடைய தாக்குதலாளி, சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
தாக்குதலுக்குரிய காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025