Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைக்கப்பட்ட பிரேதப்பெட்டிகள்..!

ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைக்கப்பட்ட பிரேதப்பெட்டிகள்..!

2 ஆனி 2024 ஞாயிறு 07:41 | பார்வைகள் : 14841


சனிக்கிழமை காலை ஈஃபிள் கோபுரத்தின் வாசலுக்கு அருகே ஐந்து பிரேத பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஃபிள் கோபுர வாசலில் அமைந்துள்ள quai Jacques-Chirac பகுதியில், சனிக்கிழமை காலை ஐந்து பிரேதப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. பாதசாரிகள் சிலரும், ஈஃபிள் கோபுர ஊழியர்களும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினரை அழைத்துள்ளனர். 

பிரேதப்பெட்டிகள் பிரெஞ்சுக் கொடி போர்த்தப்பட்டதுடன், ‘உக்ரேனில் கொல்லப்பட்ட பிரெஞ்சு இராணுவத்தினர்’ என அதில் எழுதப்படிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பிரேத பெட்டிகளை அப்புறப்படுத்தியதுடன், மேற்படி செயலில் ஈடுபட்ட மூவரைக் கைதும் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பல்கேரியா, உக்ரேன் மற்றும் ஜேமனியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்