Bagnolet பகுதியில் துப்பாக்கிச்சூடு..!
1 ஆனி 2024 சனி 05:12 | பார்வைகள் : 8729
நேற்று மே 31, வெள்ளிக்கிழமை மாலை Bagnolet (Seine-Saint-Denis) பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
மாலை 4.30 மணி அளவில் Henri-Wallon பாடசாலைக்கு அருகே நின்றிருந்த மகிழுந்து ஒன்றின் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மகிழுந்து ஒன்றில் வருகை தந்த ஆயுததாரி ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாகவும், சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, ஆயுத்தாரி தப்பிச் சென்றதாகவும், சம்பவ இடத்தில் இருந்து மூன்று துப்பாக்கி சன்னங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, Henri Wallon பாடசாலையில் இருந்து மாணவர்களை வெளியேற்றாமல் உள்ளேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் காவல்துறையினர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்பதை தெரிவித்ததன் பின்னரே மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan