■ Real Madrid கழகத்தோடு இணைந்துகொள்ளும் Kylian Mbappé.!

31 வைகாசி 2024 வெள்ளி 19:00 | பார்வைகள் : 7556
PGS கழகத்துடனான ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், Kylian Mbappé அடுத்த வாரம் Real Madrid கழகத்தோடு இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை Kylian Mbappé இனை அக்கழகத்தோடு பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஜூன் 6 ஆம் திகதி தான் அவர் முதன் முறையாக போட்டியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.