Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு - இரஷ்யாவுக்கு அழைப்பு இல்லை..!!

31 வைகாசி 2024 வெள்ளி 10:52 | பார்வைகள் : 8220
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் வரும் ஜூன் 6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு இரஷ்யா தரப்பில் இருந்து யாரும் அழைக்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய அரசர் மூன்றாம் சாள்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளனர். உச்சக்கட்ட பாதுகாப்பு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு இரஷ்யா அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொல்லப்பட்ட இரஷ்ய ராணுவத்தினருக்கு (சிவப்பு இராணுவம்) அங்கு அஞ்சலி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.