▶ மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி... எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு..!

30 ஆனி 2024 ஞாயிறு 18:16 | பார்வைகள் : 21949
இன்று இடம்பெற்ற முதற்சுற்று வாக்கெடுப்புக்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி மக்ரோனின் Renaissance கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rassemblement National கட்சி எதிர்பார்த்தபடியே அதிகூடிய இடங்களைகைப்பற்றியுள்ளது. 34% சதவீத வாக்குகளை அது பெற்றுள்ளதாகவும், Nouveau Front Populaire கூட்டணிகள் 29% சதவீத வாக்குகளையும், மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி 22% சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதேவேளை, சற்றுமுன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவருடன் பிரதமர் கப்ரியல் அத்தால் பங்கேற்றுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025