Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : துப்பரவு பணியாளர் கைது!

பரிஸ் : துப்பரவு பணியாளர்  கைது!

26 ஆனி 2024 புதன் 14:17 | பார்வைகள் : 9998


பரிசில் துப்பரவு பணியில் ஈடுபடும் ஊழியர் ஒருவரை காவல்துறையினர் பொறிவைத்து பிடித்துள்ளனர். துப்பரவு பணியாளர் எனும் பேரில் பொதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த 25 வயதுடைய இளம் துப்பரவு பணியாளர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த எட்டு மாதங்களாக குப்பை சேகரிப்பு பணியோடு, போதைப்பொருட்களையும் விநியோகித்துள்ளார். அவருடன் இணைந்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டததாகவும், 19 ஆம் வட்டாரத்தின் rue d'Hautpoul வீதியில் வசிக்கும் ஒருவர் குறித்த துப்பரவு பணியாளருக்கு இந்த போதைப்பொருட்களை வழங்கியதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வீடு சோதனையிடப்பட்டதில், 30 கிராம் கொக்கைன் போதைப்பொருளும், €16,000 யூரோக்கள் பணமும் கைப்பற்றப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்