உள்துறை அமைச்சரின் X சமூகவலைத்தள கணக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

26 ஆனி 2024 புதன் 13:48 | பார்வைகள் : 13516
உள்துறை அமைச்சர் Gérald Darmanin, தனது X (முன்னர் Twitter என அறியப்பட்ட) சமூகவலைத்தளத்தினை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறமை அறிந்ததே. உள்துறை அமைச்சராக' உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட (certification) கணக்காக அது இருந்த நிலையில், தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
X தளத்தில், பயனாளர்களின் பெயருக்கு அருகே சாம்பல் நிறத்தில் 'சரி' என அடையாளமிட்டிருந்தால் அது அரச ஊழியர், அல்லது அரசாங்க அதிகாரி என அர்த்தமாகும். அதேபோல் உள்துறை அமைச்சரின் பெருக்கு அருகே 'சாம்பல்' நிறத்தில் 'சரி' என அடையாளமிட்டிருந்த நிலையில், அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் கேட்டறிந்தபோது,
உள்துறை அமைச்சர் Nord மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அதனால் அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரி என்பதால் வேட்பாளருக்கு சாதமாக மாறிவிடக்கூடாது என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025