அரசாங்கத்தை விட்டு வெளியேறி.. பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்ற விரும்புகிறேன்... - உள்துறை அமைச்சர் Gérald Darmanin..!!

26 ஆனி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 5778
உள்துறை அமைச்சராக பணிபுரியும் Gérald Darmanin, தனது பதவியில் இருந்து விலகி, பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற விரும்புகிறேன் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கட்சி பெரும்பான்மை பெறாவிட்டால் நான் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறுவேன் என சில நாட்கள் முன்பாக Gérald Darmanin தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது தொகுதிக்காக சேவையாற்றுவதையே அவர் விரும்புவதாகவும், ’நாற்பது வயதுடைய எனக்கு கிடைத்திருக்கும் சிறிய அரசியல் அனுபவத்தை வைத்து எனது தொகுதிக்கு சிறிய பங்களிப்பைச் செய்வேன்!’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
’ஐரோப்பிய தேர்தலில் நாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. எது சரியாக போகவில்லை என்பதை நாம் உணரவேண்டிய தருணம்!’ எனவும் அவர் தெரிவித்தார்.