தங்களின் வதிவிடம்களை விட்டு வெளியேற தயாராகும் தலைநகர் (Paris) வாசிகள்.

24 ஆனி 2024 திங்கள் 06:35 | பார்வைகள் : 12289
பிரான்சின் நாட்டவர்களில் அதிகமானோர் அமைதியையும், சுதந்திரமான வாழ்வையும், பாரம்பரியத்தையும் விரும்புபவர்கள், அதிகமான கலகலப்புகள், நெரிசல்களை, அசோகரியுங்களை அதிகம் விரும்பாதவர்கள் எனவே தலைநகரையும், அதை அண்டிய நகரங்களை உள்ளடக்கிய Ile-de-France பகுதியில் வாழும் கணிசமான பிரான்ஸ் நாட்டவர்கள் தற்காலிகமாக தங்களின் வதிவிடம்களை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் ஒலிம்பிக் போட்டிகளின் போது சுமார் 15 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பாதுகாப்பு கருதி பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன, அதில் சில பகுதிகளுக்கு செல்ல'பாஸ்' நடைமுறை, பல தொடரூந்து நிலையங்கள் மூடப்படல், அதிகமான காவல்துறையினரின் நடமாடல், என பல அசோகரியங்கள் மக்களுக்கு ஏற்படவுள்ளது. அத்தோடு அதே காலத்தில் அதிகமான வாகன நெரிசல்கள், பொதுப் போக்குவரத்து நெரிசல்கள் உணவகங்களில் அதிக கூட்டங்கள், களியாட்டங்கள், அதிக வெளிநாட்டவர்களின் வருகைகள், இதனால் வழிப்பறிப்புகள், களவுகள் அதிகரிக்கும் எனவும் பயம் கொள்ளும் பிரான்ஸ் நாட்டவர்களே இவ்வாறு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.
எனவே ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் தங்களை அதில் இருந்து விடுவித்து கொண்டு அமைதியான பகுதிகளுக்கு செல்ல அவர்கள் தயாராகி வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025