பரிஸ் : 14 சிறைக்கைதிகள் தப்பி ஓட்டம்..!
24 ஆனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 14230
பரிசில் உள்ள Vincennes தடுப்பு சிறைச்சாலையில் இருந்து (centre de rétention administrative de Vincennes) 14 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், 14 கைதிகள் மொத்தமாக தப்பி ஓடியதாகவும், அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 பேர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்றுள்ள அனைவரும் பெரும் குற்றவாளிகள் இல்லை எனவும், ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது சட்டஒழுங்கை மீறிச் செயற்பட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை அறையில் துளை ஒன்றை ஒன்றை ஏற்படுத்தி தன் வழியாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan