அதிமுக இணைவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
20 ஆனி 2024 வியாழன் 17:03 | பார்வைகள் : 6433
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பாடம் படிக்க வேண்டும். அதிகாரம், ஆணவம்தான் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க காரணம். பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.
அதிமுக தற்போது அபாய கட்டத்தில் உள்ளது. அதிமுக இணைவதற்கு எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் திமுக அரசு தோல்வியை கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan