அதிரடிப்படை வீரர் துப்பாக்கிச்சூட்டில் காயம்..!
18 ஆனி 2024 செவ்வாய் 13:20 | பார்வைகள் : 9126
RAiD அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். Maurepas (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீரர் தனது வீட்டில் இருந்தபோது, இரவு 11.15 மணி அளவில் பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இரு கொள்ளையர்கள் பக்கத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சிசெய்துகொண்டிருந்தனர். அவர்களிடம் கண்ணீர்புகை குண்டு இருந்துள்ளது.
அதையடுத்து, குறித்த வீரர் அச்சம்பவத்தில் தலையிட்டு அவர்களை கைது செய்ய முற்பட்டார். அதன்போது கொள்ளையர்களில் ஒருவர் அவரின் துப்பாக்கியை பறித்து, அவரை சுட்டுள்ளார்.
இதில் குறித்த வீரர் படுகாயமடைந்துள்ளார். அவர் Clamart (Hauts-de-Seine), நகரில் உள்ள Percy Army இராணுவ பயிற்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan