■ Metz : கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயம்!

17 ஆனி 2024 திங்கள் 15:26 | பார்வைகள் : 10494
இன்று ஜூன் 17, திங்கட்கிழமை காலை பிரான்சின் வடகிழக்கு நகர் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரான்சின் வடகிழக்கு நகரமான Metz (Moselle) இல் இச்சம்பவம் இன்று காலை 10.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Borny எனும் சிறிய சந்தைப்பகுதி ஒன்றில் உள்ள மளிகை கடை ஒன்றின் முன்பாக கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய்யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஐவரும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்து அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025