அனைத்து இளைஞர்களும் வாக்களிக்க வேண்டும்.. - Kylian Mbappé கருத்து!

16 ஆனி 2024 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 14294
அனைத்து இளைஞர் யுவதிகளும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé கோரியுள்ளார்.
ஒஸ்ரியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள Kylian Mbappé, சற்று முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதன் போது, “அனைத்து இளைஞர்களும் சென்று வாக்களிக்க வேண்டும்.நாங்கள் இப்போது மிகவும் நெருக்கடியாக ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். நாங்கள் எங்களது சூழ உள்ள உலகத்தில் இருந்து பிரிந்துவிடக்கூடாது. இன்று நாங்கள் ‘தீவிர’ மனப்பாங்குடன் இருப்பவர்களிடம் அதிகாரம் செல்வதை பார்க்கின்றோம். எங்களது எதிர்காலத்தை சிறப்பிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது!” என அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 30 ஆம் திகதியும், ஜூலை 7 ஆம் திகதியும் பிரான்சில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.