Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் - பரிசில் கைது..!

பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் - பரிசில் கைது..!

14 ஆனி 2024 வெள்ளி 15:15 | பார்வைகள் : 14277


கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் தேடப்பட்டு வந்த Diego MS எனும் கொள்ளையன் ஒருவர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பிய நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த 33 வயதுடைய கொள்ளையன், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல ஆடம்பர விடுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார். கொலம்பியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தேடப்பட்டு வந்த அவர், சென்ற மே மாதம் பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு விடுதியில் சுற்றுலாப்பயணி ஒருவரின் மடிக்கணனி, விலையுயர்ந்த கமரா போன்றவற்றை திருடியிருந்தார். 

2017 ஆம் ஆண்டில் இருந்து இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், இறுதியாக பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்