Paristamil Navigation Paristamil advert login

சோம்ப்ஸ்-எலிசேயில் உருவாக்கப்பட்டுள்ள அரங்குகள்.!

சோம்ப்ஸ்-எலிசேயில் உருவாக்கப்பட்டுள்ள அரங்குகள்.!

13 ஆனி 2024 வியாழன் 20:09 | பார்வைகள் : 10171


உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் Champs-Elysées இல், ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு அரங்குகள் (terrasses) அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே போன்ற வடிவுடைய 18 அரங்குகள் இன்று ஜூன் 13, வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன. சோம்ப்ஸ்-எலிசே வீதிக்கு வருபவர்கள் ஓய்வு எடுக்க, காலாற அமர்ந்திருக்க இந்த அரங்குகள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



4.60 மீற்றர் அகலம் கொண்ட இந்த அரங்கு, கண்ணாடியிலான கூரையினைக் கொண்டது. அது இயந்திரமயமாக்கப்பட்டது எனவும், தேவைப்படும் போது மேற்கூரையினை திறக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள உணவகங்களொலும், கஃபே விடுதிகளிலும் முற்றங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே வடிவிலான அரங்குகளை ஒலிம்பிக் குழுவே அமைக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு 45 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த அரங்குகள் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்