புதிய ஆறு நிலையங்களுடன் 11 ஆம் இலக்க மெற்றோ..!

13 ஆனி 2024 வியாழன் 11:28 | பார்வைகள் : 13507
11 ஆம் இலக்க மெற்றோ இன்று ஜூன் 13 ஆம் திகதி முதல் புதிய ஆறு நிலையங்களுக்கு பயணிக்க உள்ளது.
Châtelet இல் இருந்து Mairie des Lilas நிலௌயம் வரை பயணித்த குறித்த மெற்றோ, இன்று முதல் Rosny-Bois-Perrier நிலையம் வரை பயணிக்க உள்ளது. 25 நிமிடங்களில் Rosny-Bois-Perrier இனைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை RER E நிறுத்தமாக மட்டும் இருந்த Rosny-Bois-Perrier, இன்று முதல் 11 ஆம் இலக்க மெற்றோவும் வந்தடையும் என்பதால் பல ஆயிரம் மக்கள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 8,000 பயணிகளை இந்த புதிய நிலையங்கள் சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025