■ பிரான்சை வந்தடைந்தது ஒலிம்பிக் தீபம்!
9 வைகாசி 2024 வியாழன் 05:15 | பார்வைகள் : 11306
நேற்று மே 8 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு ஒலிம்பிக் தீபம் பிரான்சை வந்தடைந்தது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், இந்த ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட உள்ளது.
மார்செயின் 'பழைய துறைமுகம்’ Vieux-Port de Marseille பகுதியில் வைத்து தீபம் வரவேற்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மார்செய் நகருக்கு பயணித்திருந்தார்.
பிரான்சின் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் Florent Manaudou இந்த தீபத்தை கொண்டுவர, அவரிடம் இருந்து பாலிம்பிக் வீரர் (மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி) Nantenin Keïta பெற்றிருந்தார். பின்னர் அவரிடம் இருந்து இந்த தீபத்தினை பாடகர் Jul பெற்றிருந்தார். இதுபோல் அடுத்த இரண்டரை மாதங்களில் மொத்தமாக 10,000 பேர் நாடு முழுவதும் கொண்டுசெல்ல உள்ளனர். அவர்களில் ஒருவராக ஈழத்தமிழர் தர்சன் செல்வராஜாவும் உள்ளார். (இது தொடர்பான எமது விரிவான செய்தி >> இங்கே)
அதேவேளை, மாற்று பாலினத்தினரைச் (LGBTQIA+) சேர்ந்த Martini என்பவர் இந்த ஒலிம்பிக் தீபத்தினை சுமந்ததிருந்தார். மாற்று பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக் தீபத்தைச் சுமப்பது இதுவே முதன்முறையாகும்.
நேற்று பிற்பகல் முதலே ஒலிம்பிக் தீபத்தினைக் காண, மார்செயின் பழைய துறைமுகப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். அடுத்தடுத்த நாட்களில் மார்செ முழுவதும் இந்த ஒலிம்பிக் தீபம் கொண்டுசெல்லப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan