தீவிர வலது சாரியினரது ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்த காவல்துறை!

8 வைகாசி 2024 புதன் 08:00 | பார்வைகள் : 8668
பரிசில் இம்மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தீவிர வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். பிரெஞ்சு தீவிர வலதுசாரி ஆர்வலரான Sébastien Deyzieu கடந்த 1994 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி எதிர்பாராவிதமாக கொல்லப்பட்டிருந்தார். அவரது மறைவை அடுத்து மேற்படி ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே இவ்வருடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்துக்கு முழுமையான தடையினை பரிஸ் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.