Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஒரே இரவில் 20 வாகனங்கள் தீக்கிரை!

பரிஸ் : ஒரே இரவில் 20 வாகனங்கள் தீக்கிரை!

7 வைகாசி 2024 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 15360


பரிசில் நேற்று ஒரே இரவில் இருபதற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது சம்பவம் நள்ளிரவு 1.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.  rue Eugène-Manuel வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு மகிழுந்துகள் தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதையடுத்து, அருகருகே உள்ள வீதிகளிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இவ்வாறு மகிழுந்து, இலகுரக வாகனம், மோட்டார் சைக்கிள்கள் என மொத்தமாக 20 அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி சில கடிதங்களை சம்பவ இடத்தில் விட்டுச் சென்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்