சீன ஜனாதிபதியுடன் பிரான்சின் தென்மேற்கு நகருக்கு பயணமாகும் மக்ரோன்!
5 வைகாசி 2024 ஞாயிறு 10:11 | பார்வைகள் : 6826
இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்கு வருகை தரும் சீன ஜனாதிபதி Xi Jinping, பிரான்சின் தென்மேற்கு நகரமான Hautes-Pyrénées இற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் பயணிக்க உள்ளார்.
Xi Jinping ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து (2013 ஆம் ஆண்டு) பிரான்சுக்கு வருகை தருவது இது மூன்றாவது முறையாகும். திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அவர் பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், அத பின்னர் சேர்பியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு பயணிக்க உள்ளார்.
இன்று இரவு Xi Jinping ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் எலிசே மாளிகையில் இரவு உணவு அருந்துவார் எனவும், நாளை திங்கட்கிழமை Hautes-Pyrénées நகருக்கு பயணிக்க உள்ளார் எனவும் அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan