நகரசபை தேர்தல் 2026 : போட்டியிடுகின்றாரா ஜனாதிபதி மக்ரோன்??
5 வைகாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 15890
நகரசபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு இடம்பெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மார்செ நகரில் போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பில் மக்ரோன் சில தகவல்களை நேற்று சனிக்கிழமை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, ‘எந்த தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை’ என உறுதிப்பட தெரிவித்தார். அண்மைய நாட்களில் மார்செய் நகரம் குறித்து மிகுந்த கவனத்துடன் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் மக்ரோன், ”Marseille en grand" எனும் திட்டம் ஒன்றையும் கொண்டுவந்திருந்தார். பிரான்சின் இரண்டாவது தலைநகரமாக மார்செயை உருவாக்குவதே அந்த திட்டமாகும்.
அதையடுத்தே, நகரசபை தேர்தலில் மார்செ நகரில் போட்டியிடப்போகின்றார் எனும் கருத்து பரவலாக பரவியது. ”எனக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிலர் கருதலாம். ஆனால் நான் எதிலும் போட்டியிடவில்லை!” என நேற்று சனிக்கிழமை நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan