Val-de-Marne : காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு! - €382,000 யூரோக்கள் பணத்துடன் இருவர் கைது!

4 வைகாசி 2024 சனி 10:00 | பார்வைகள் : 8912
Bry-sur-Marne (Val-de-Marne) நகரில் இடம்பெற்ற காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில், குற்றவாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் Noisy-le-Grand (Seine-Saint-Denis) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமான Peugeot 3008 மகிழுந்து ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.
ஆனால் மகிழுந்தை விட்டு இறங்கிய அவர்கள், அதைக் கைவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதையடுத்து காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்றனர்.
இந்த துரத்தல் Bry-sur-Marne (Val-de-Marne) நகரில் சென்று முடிவடைந்துள்ளது.
தப்பி ஓடியவர்களில் ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டு இருவரையும் கைது செய்தனர். அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் வசித்த வீடு சோதனையிடப்பட்டது. அதன்போது அவர்களிடம் இருந்து €382,500 யூரோக்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், மேலதிக தகவல் தெரிவிக்கப்படவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025