ஆறு கொலேஜ் மாணவர்களிற்கு நீதிமன்றத்தில் தண்டனை!!
4 வைகாசி 2024 சனி 06:51 | பார்வைகள் : 9517
கடந்த 28ம் திகதி ஒரு 14 வயதுடைய கொலேஜ் மாணவி, அவருடன் கூடப் படிக்கும் மாணவர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தலையில் பிடித்து இழுத்து தரையில் வீழ்த்தி மிகமோசமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இதனை ஐந்து சக மாணவர்கள் காணொளியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அதில் ஒருவர், தாக்கிய மாணவனிடம் சென்று "அவளிற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" எனக் கூறியுள்ளார் என மொன்பெலியார் (Montbéliard) நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட அறுவரில் ஐவர் Sochaux (Doubs) கொலேஜ் நிர்வாகத்தினால் கொலேஜிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆறாவது நபர் கொலேஜின் ஒழுக்காற்று ஆலோசனை சபையால் (conseil de discipline) விசாரிக்கப்பட உள்ளார்.
வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டமைக்கும், அதற்குத் துணை போனதற்கும், ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்ற மறுத்தமைக்கும், காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டமைக்காகவும், இந்த ஆறு கொலேஜ் மாணவர்களிற்கும், எதிர்வரும் ஜுலை மாதம் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் என, நீதிபதி தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan