RER C தண்டவாளத்தில் கவிழ்ந்த மகிழுந்து! - சாரதி உயிராபத்தில்..!!

3 வைகாசி 2024 வெள்ளி 15:24 | பார்வைகள் : 11671
மகிழுந்து ஒன்று தொடருந்து கடவையை உடைத்துக்கொண்டு பாய்ந்து, RER C தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் Choisy-Le-Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் இருந்து பாய்ந்து, தடையை உடைத்துக்கொண்டு RER C தொடருந்துடன் மோதுண்டது.
5 அடி ஆளத்தில் இருந்த தண்டவாளத்துக்குள் சிக்கியதில் மகிழுந்து சாரதி படுகாயமடைந்தார்.
சாரதி 18 வயதுடையவர் எனவும், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. பிற்பகல் 4.30 மணி வரை Juvisy (Essonne) நிலையம் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025