மெற்றோவில் பாலியல் தாக்குதல்! - சட்டவிரோத குடியேற்றவாதி ஒருவர் கைது!

2 வைகாசி 2024 வியாழன் 18:43 | பார்வைகள் : 10509
மெற்றோவில் வைத்து 22 வயதுடைய இள பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட துனிஷியாவைச் சேர்ந்த ஆவணங்கள் அற்ற கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு, 7 ஆம் வட்டாரத்தின் Félix Faure நிலையத்தில் நின்றிருந்த எட்டாம் இலக்க மெற்றோவில் வைத்து குறித்த 22 வயதுடைய பெண்ணை அகதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார். மெற்றோவுக்குள் அப்பெண் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய குறித்த அகதி, பெண்ணின் அந்தரங்கப்பகுதிகளில் கை வைத்துள்ளார்.
ஆனால், உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் துனிஷியாவைச் சேர்ந்த ஆவணமற்ற அகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025