மண்சரிவு! - மூன்று நாட்கள் தடைப்படும் TER...

29 சித்திரை 2024 திங்கள் 07:55 | பார்வைகள் : 6970
மண் சரிவு காரணமாக Firminy-Lyon Perrache நகர் நோக்கி பயணிக்கும் TER தொடருந்து தடைப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் திகதிக்குப் பின்னர் தான் மீண்டும் சேவைகள் இயக்கப்படும் என SNCF அறிவித்துள்ளது.
Loire நகரில் இருந்து Lyon Perrache (Rhône) நிலையம் நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு புறப்பட்ட தொடருந்து ஒன்று மண்சரிவுக்குள் சிக்கிக்கொண்டது. மண் சரிவினால் போக்குவரத்து தடைப்பட்டு, தொடருந்துக்குள் சிக்கிக்கொண்ட 200 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரும் பாறை ஒன்று தொடருந்துடன் மோதியதாக அறிய முடிகிறது. அதிஷ்ட்டவசமாக அதில் இருவர் மட்டுமே காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை வரை போக்குவரத்து தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025