பரிஸ் : வீடொன்றில் இருந்து €400,000 யூரோக்கள் பணம் கொள்ளை!

29 சித்திரை 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 8225
படிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து €400,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 2-3 மணிக்குள்ளாக இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue Marceau வீதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த பணப்பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையிடுக்கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் அதே அடுக்குமாடி குடியிருப்பின் பிறிதொரு வீட்டில் வசிப்பதாவும், வீட்டின் கதவு உடைக்கப்படும் போது சமிக்ஞை எதுவும் ஒலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக €400,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள், பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025