Saint-Lazare நிலையத்தில் ஆயுயங்களுடன் சூட்கேஸ் மீட்பு! - ஒருவர் கைது!
28 சித்திரை 2024 ஞாயிறு 08:26 | பார்வைகள் : 20290
Saint-Lazare நிலையத்தில் ஆயுதங்களுடன் கூடிய பயணப்பெட்டி (சூட்கேஸ்) ஒன்று கடந்த மார்ச் 20 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நகரைக் கைது செய்தனர். D பிரிவு ஆயுதங்கள் அடங்கிய கைவிடப்பட்ட சூட்கேஸ் ஒன்று Saint-Lazare நிலையத்தில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
அதன்போது போக்குவரத்து தடையும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே குறித்த வயது குறிப்பிடப்படாத நபர் கைது செய்யப்பட்டதாக நேற்று ஏப்ரல் 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan