Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இன்று பிரான்ஸ் முழுவதும் பெரும்பாலான மருந்தகங்கள் (pharmaciens) மூடப்பட்டுள்ளது.

இன்று பிரான்ஸ் முழுவதும் பெரும்பாலான மருந்தகங்கள் (pharmaciens) மூடப்பட்டுள்ளது.

30 வைகாசி 2024 வியாழன் 10:36 | பார்வைகள் : 10843



"கடந்த பத்து ஆண்டுகளில் தொழிலில் நடக்கும் முதல் பாரிய வேலைநிறுத்தம் இதுவாகும்" என வர்ணிக்கப்படும் அளவிற்கு இன்று வியாழக்கிழமை 30/05/2024 மருந்தகங்கள் (pharmaciens) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. பிரான்ஸ் முழுவதும் உள்ள சுமார் 20,500 மருந்தகங்களில் 15,000 முதல் 18,000 வரையிலான மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் "நோயாளியின் பாதுகாப்பைப் பேணுவதே தவிர, தொழிலைச் சிதைப்பது அல்ல" என மருந்தகங்களின் தேசிய அமைப்பின் கௌரவ தலைவர் Jean-Louis Beaudeux  தெரிவித்துள்ளார். குறித்த வேலைநிறுத்தம் இடம்பெற காரணம் மருந்துகளின் தட்டுப்பாடு, விலையேற்றம், அதனால் மூடப்பட்டு வரும் மருந்தகங்கள் இவற்றை கவனத்தில் கொள்ளாத அரசு இவையே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் தட்டுப்பாடு அவற்றின் விலையேற்றம் காரணமாக 2022ல் 227 மருந்தகங்களும், 2023ல் 350 மருந்தகங்களும், முடப்பட்டுள்ளது இந்த நிலையில் 2024 முடிவுகள் பிரான்சில் 445 மருந்தகங்கள் மேலும் முடப்படும் அபாயம் இருப்பதாகவும், மூடப்பட்ட மருந்துகளில் பெரும்பாலானவை ஒரே ஒரு மருந்தகத்தைக் கொண்ட கிராமப்புறங்களாகவே இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்