Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ளும் 2-ஆவது நபர் 

மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ளும் 2-ஆவது நபர் 

30 வைகாசி 2024 வியாழன் 08:13 | பார்வைகள் : 4664


உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். 

இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.

இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும்.

முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஆரம்பித்தில்  நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. 

இந்நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

"எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

இம்மாத ஆரம்பித்தில் இருந்தே சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்