பரிஸ் : பூனையை மீட்க கூரையில் ஏறிய ஒருவர் தவறிவிழுந்து பலி!
29 வைகாசி 2024 புதன் 17:46 | பார்வைகள் : 15823
கூரையில் சிக்கிக்கொண்ட பூனை ஒன்றை மீட்பதற்காக நபர் ஒருவர் வீட்டின் கூரையில் ஏறியுள்ளார். அங்கிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மே 18 ஆம் திகதி பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்று பிற்பகல் 12.30 மணி அளவில் அவர் வளர்க்கும் பூனை ஒன்று கூரையின் மேல் சிக்கிக்கொண்டதை அடுத்து, பூனையை மீட்பதற்காக கூரையின் மீது ஏறியுள்ளார்.
மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan