யாழ்ப்பாணத்தில் வாகன விபத்தில் நால்வர் காயம்

29 வைகாசி 2024 புதன் 10:21 | பார்வைகள் : 5457
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் , A9 வீதியில் வைத்து கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
கனரக வாகனத்தை திருப்ப முற்பட்ட போது பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025