Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பாரிய வெடிப்பு விபத்து!  7 பேர் காயம்

அமெரிக்காவில் பாரிய வெடிப்பு விபத்து!  7 பேர் காயம்

29 வைகாசி 2024 புதன் 10:15 | பார்வைகள் : 8999


அமெரிக்காவின் ஒகாயோவின் யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

 7 பேர் காயமடைந்துள்ளதுள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.


 இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், .வாயு கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும இது வெடிப்பு சம்பவம் என உறுதியாக தெரிவிக்க முடியும் என யங்டவுனின் தீயணைப்புபிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கின்றோம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரையும் பெண்ணையும் காணவில்லை ஆண் வங்கி ஊழியர் என தீயணைப்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்