மெற்றோவில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்.. நால்வர் காயம்! - ஆயுததாரி கைது.!

27 வைகாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 10324
லியோன் (Lyon) நகர மெற்றோவில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நேற்று மே 26, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் இத்தாக்குதலில் லியோனின் 7 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. மெற்றோவில் பயணித்த ஒருவர், திடீரென கத்தி ஒன்றை உருவி எடுத்து மெற்றோவுக்குள் இருந்த பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
Debourg மற்றும் Place Jean-Jaurès நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், காயமடைந்த நால்வரும் ஆண்கள் எனவும், அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
27 வயதுடைய தாக்குதலாளி கைது செய்யப்பட்டார் அவரது நோக்கம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025